ஊராட்சிகளில் ஆன்லைனில் கட்டிட அனுமதி

ஒற்றை சாளரமுறை

தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி இனி ஆன்லைனில் மட்டுமே பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்

  1. வரைபடம்
  2. மதிப்பீடு
  3. நில ஆவணம்
  4. பட்டா/சிட்டா

போன்ற ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவேண்டியது இருக்கும்.

கட்டிட மதிப்பீட்டு தொகையில் ஊராட்சி அனுமதிக்கு கட்ட வேண்டிய தொகையும் ஆன்லைனில் கணக்கீடு செய்து நமக்கு காட்டும் வகையில் மென்பொருள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாம்.

லஞ்சம் இனி இல்லை

ஊராட்சிகளில் இதுவரை அனுமதி பெறுவதற்கு நிர்வாகத்தினர் கேட்கும் இதரத் தொகை என்ற வஞ்சம் இனி தேவை இல்லை.

உரிய ஆவணத்தை பதிவேற்றம் செய்த 7 நாட்களுக்குள்  கள ஆய்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு செய்து அனுமதி வழங்க வேண்டும். ஊராட்சி நிர்வாகம் தாமதம் செய்தால் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி நம்மிடம் கூறினார்.

எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி அடுத்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

Also Read  காதப்பாறை ஊராட்சி - கரூர் மாவட்டம்