என்ன விளையாட்டு ஒற்றரே…
வேறென்ன தலைவா…பண விளையாட்டுத் தான்.ஒவ்வொரு பில்லிற்கு ஒவ்வொரு ரேட் என புகுந்து விளையாடுகிறார்கள்.
யார் அவர்கள் ஒற்றரே…
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஆட்டம் தான் அளவில்லாமல் போய்விட்டது. இந்த நிலை தமிழகம் முழுவதும் தனி அலவலர் ஆளுமை உள்ள இடங்களில. நடைபெறுகிறது தலைவா…
எந்தெந்த பணிகளில் ஒற்றரே..
எல்லா விசயங்களிலும் தான் தலைவா…குறிப்பாக மின்மோட்டார் பழுது நீக்குவது, பைப் லைன் பிரச்சனை போன்ற செயல்களில் செலவுகளை விட இரண்டு மடங்கு அதிகமாக பில் போடப்படுகிறது.
ஊராட்சி செயலாளர்களுக்கும் பங்கு உண்டா ஒற்றரே…
பில்லை போடுவதில் ஆரம்ப அதிகாரப் புள்ளியே அவர்கள் தானே தலைவா. சோனலுக்கு கொடுக்கும் தொகை, பிடிஓ வுக்கு கொடுக்கும் தொகை போக,அவர்களுக்கான தொகை என விரிவடைகிறது.
எத்தனை சதவீதம் ஒற்றரே…
யார்யாருக்கு எவ்வளவு சதவீதம் என அடுத்த முறை சந்திக்கும்போது கூறுகிறேன்தலைவா. தென்மாவட்டங்களில் உள்ள ஒரு ஒன்றியத்தில் முழுமையான விவரங்களை சேகரித்து வருகிறேன்.
அவர்களின் பெயர்களுடன் கமிசன் பங்குத் தொகையை கூறுங்கள் ஒற்றரே…
கண்டிப்பாக தலைவா…அவர்களிலும் நேர்மையானவர்களும் உள்ளனர். அடுத்த சந்திப்பில் முழு விவரங்களையும் கூறுகிறேன் என சொல்லிவிட்டு மறைந்தார் ஒற்றர்.