உள்ளாட்சி தோறும் நான்கான்டு சாதனை விளம்பரம் – ஒற்றர் ஓலை

பொதுத் தேர்தல் பணியை ஊராட்சிகளில் ஆரம்பிக்கிறது ஆளும்கட்சி என்று கூறியபடி வந்தார் ஒற்றர்.

என்ன ஒற்றரே உள்ளாட்சி தேர்தல் இல்லையா…

அட போங்க தலைவா… பொது தேர்தல் முடிந்த பிறகே ஒரே தேர்தலாக உள்ளாட்சிக்கு  நடைபெறுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம்.

அப்படி என்றால் எந்த தேர்தலை பற்றி சொல்கிறீர்கள் ஒற்றரே…

சட்டமன்ற பொதுத்தேர்தலைத் தான் கூறிகிறேன். ஆளும்கட்சியின் நான்காண்டு சாதனையை ஊராட்சி,ஒன்றியம்,மாவட்டம் என மூன்று பகுதிகளிலும் விளம்பர பாதாகை வைக்க வேண்டும் என மேலிட உத்தரவாம் தலைவா…

அப்படி போடுங்க…உள்ளாட்சி பணத்தில் ஆளும்கட்சி தேர்தல் பயணத்தை ஆரம்பிக்கிறதா ஒற்றரே.

சரியாக சொன்னீங்க…29 மாவட்டத்தில் தேர்தலை நடத்தாது பொது தேர்தலுக்கான பணியை ஆளும் கட்சி ஆரம்பிக்கிறது.மற்ற துறைகளை விட, ஊரக உள்ளாட்சிக்கான நிதியில் 70 சதவீத்த்திற்கும் மேல் மத்திய அரசின் பங்களிப்பு தான் அதிகம் என்கின்றனர் இந்தியாவை ஆளும் கட்சியினர்.

அப்படியானால், ஊராட்சி நிதியை விளம்பரத்திற்கு பயன்படுத்துவதை எதிர்த்து குரல் கொடுப்பார்களா ஒற்றரே.

அது நயினாருக்கே வெளிச்சம் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  பஞ்சலிங்கபுரம் ஊராட்சி - கன்னியாகுமரி மாவட்டம்