அமைச்சர்கள் சொல்லிவிட்டார்கள் திட்டவட்ட திட்ட இயக்குநர்கள் – ஒற்றர் ஓலை

அமைச்சர் என்ன சொன்னாராம் ஒற்றரே…

தென் மாவட்டங்களில் இரண்டு திட்ட இயக்குநர்கள் மூன்றாண்டுகள் கடந்தும் ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர்.அவர்களுக்கு அவர்கள் சமூகம் சார்ந்த அமைச்சர்களின் ஆதரவு இருக்கிறதாம் தலைவா...

அதனால் என்ன ஒற்றரே…

வரும் தேர்தல் வரை தங்களுக்கு இடமாறுதல் வராது என சக திட்ட இயக்குநர்களிடம் உறுதியாக சொல்லி வருகிறார்களாம்.அதனால் மற்ற திட்ட இயக்குநர் மனதளவில் காயம் பட்டுள்ளனர் தலைவா…

ஒற்றரே…அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதே திராவிட மாடல் என்கிறாரே முதல்வர்.

அதெல்லாம் பேச்சோடு சரி தலைவா…ஊரக வளர்ச்சி துறையில் தங்கள் சமூகம் சார்ந்த அமைச்சர்களை,ஆளும்கட்சியினரை அணுகி,தங்களுக்கான இருப்பிடத்தை நீண்ட காலமாக தக்கவைத்து கொள்கின்றனர்.

பாதிக்கப்பட்ட அதிகாரிகள் அரசுக்கு எதிரான மனநிலைக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளதே ஒற்றரே…

சரியாக சொன்னீங்க தலைவரே…மக்களோடு ஒன்றிணைந்து பயணிக்கும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளின் ஆதரவு ஆளும் கட்சிக்கு அவசியம். உள்ளாட்சி துறைக்கே அமைச்சராக இருந்த முதல்லவருக்கு இந்த விரங்கள் தெரியாதா என்ன?

இந்த தகவலை முதல்வருக்கு நெருக்கமான மூத்த பத்திரிகையாளரிடமும் அதிகாரிகள் சொன்னதாக தெரிகிறது ஒற்றரே…

அனைவருக்குமான சம வாய்ப்பு கிடைக்க வேண்டும். கிடைக்கும் என நம்பலாம் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  நூறுநாள் வேலை ஊதியம் உயர்வு