SIR
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது..
வாக்காளர்பட்டியலை தூய்மைப்படுத்தும் சிறப்புத்திட்டம்(SIR) தற்போது தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.இப்பணிக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் உதவிக்கு பணியாளர்களை அமர்த்தும்பணியை ஊரகவளர்ச்சித்துறை சிறப்பாக செய்துவந்த நிலையில் தற்போது அதனை தினசரி கண்காணிப்பு செய்யவும்,சில இடங்களில் படிவங்களை பூர்த்தி செய்து பெறவும் ஊராட்சி செயலர்களை ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகங்கள் முயற்சிப்பது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல
வாக்காளர் பட்டியலோடு தொடர்புடைய துறையின் அலுவலர்கள் பலர் புகைப்படம் எடுத்து அனுப்புவதே தங்களது தலையாய கடமையாக உள்ளனர்..அவர்களை வேலை வாங்கிட மாவட்ட நிர்வாகங்கள் தயங்குகின்றன.அதே தருணத்தில் எண்ணிலடங்கா பணிகளை செய்யக்கூடிய வளர்ச்சித்துறை பணியாளர்களை நிர்பந்தப்படுத்தி பணியை செய்ய வைப்பதும்,பின்னர் பணிகளில் முன்னேற்றமில்லை.வரிவசூல் இல்லை,தண்ணீர் பிரச்சனை,பெட்டிசனுக்கு பதில் கொடுக்கவில்லை,லைட் எரியவில்லை,சாக்கடை பிரச்சனை,அறிக்கைகள் கொடுக்கவில்லை என்பதும் சரியானதாக இல்லை..வளர்ச்சித்துறையினருக்கு மட்டும் எத்தனை எத்தனை தொல்லைகள்?
தவிர தற்போது அடுத்த 05 ஆண்டுகளுக்கான நிதித்தேவையை பூர்த்தி செய்யும் 07 வது மாநில நிதி ஆணைய அறிக்கை வரும் 15 ம் தேதிமுதல் இணையத்தில் ஏற்ற வேண்டியுள்ளது.அதற்காக அறிக்கைகள் புள்ளிவிபரங்கள் தேவைப்படும் நிலையில் மாவட்ட நிர்வாகங்கள் இதனை செய்தே ஆக வேண்டும் என நிர்பந்திப்பது சரியானதாக இல்லை
இப்பணிகளை செய்ய வேண்டிய பொறுப்புள்ள துறைக்கு எந்த பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என விளங்கவில்லை..புகைப்படம் எடுக்கும் பணியே பிரதானமாக பல இடங்களில் ஓடிக்கொண்டுள்ளது
சட்டமன்ற தேர்தல் ஆனாலும் வாக்காளர் பட்டியல் என்றாலும் வளர்ச்சித்துறையால்தான் முடியும் என்றால் பிற துறைகள் எதற்காக?
வளர்ச்சித்துறையினருக்கு இவ்வளவு நெருக்கடி கொடுக்கும் மாவட்ட நிர்வாகங்கள் வரியின வசூல் செய்ய பிறதுறைகளை ஈடுபடுத்துவார்களா?
தமிழ்நாடு அரசு தனி அலுவலர் காலத்தில் வளர்ச்சித்துறையினர் மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்ட நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பிறதுறை பணிகளில் ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்களையும்,குறிப்பாக ஊராட்சி செயலர்களை ஈடுபடுத்துவதனை உடனடியாக கைவிட வேண்டும்.இது தொடரவிடாமல் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்..
இவ்வாறு அவர் கூறினார்
































