மிகப் பெரிய செய்தியா ஒற்றரே…
ஆமாம் தலைவா…இஆப பயிற்சி காலகட்டத்தில் வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றுகிறார்கள்.பிற மொழி பேசும் அதிகாரிகள் வருவாய் துறையில் பயிற்சிக்காக பணி ஆற்றுவது சரி.ஆனா…
என்ன ஒற்றரே…என்ன விடயம்?
ஊரக வளர்ச்சி துறையில் பிற மொழி சார்ந்தவர்கள் பயிற்சி காலத்தில் பணியாற்றுவது சிரமத்தை ஏற்படுத்துகிறது. நமது கிராமங்களுக்கு என்ன தேவை என்பது நேரடியாக பயிற்சிக்கு வரும் பிற மாநிலத்தவருக்கு புரிவது கடினம் தலைவா…
அதற்கு என்ன செய்வது ஒற்றரே…
நமது மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இந்திய ஆட்சி பணியாளர்களை ஊரக வளர்ச்சி துறையில் பயிற்சி காலத்தில் பணியாற்ற வாய்ப்பு அளிப்பது மட்டுமே சரியாக இருக்கும்.அதனால், ஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிக்கு வரும் இஆப எண்ணிக்கையை குறைக்க வேண்டும் தலைவா…
அரசு அல்லவா முடிவு எடுக்க வேண்டும் ஒற்றரே…
ஆமாம் தலைவா…மக்களுக்காக தானே அரசு.கிராம புற மக்கள் நேரடியாக அணுகும் அதிகாரிகள் தமிழ் தெரிந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.