நிதி விடுவிப்பு
கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்த, 100 நாள் வேலை அளிக்கும் திட்டத்தை, 2005ல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில், 2008 – 09ம் ஆண்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு, 5 கி.மீ., சுற்றளவுக்குள், ஓராண்டில் 100 நாட்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கான ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்தது. இந்த திட்டத்தில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ரூ.2,999 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.