ஆணையர் ஆணை
பார்வை 1ல் காணும் அரசாணையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) பணிபுரியும் மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் அனைத்து கணினி உதவியாளர்களுக்கு மாத தொகுப்பூதியமாக வெளிசந்தை நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட ஊதியம் ரூ.16,000/- இருந்து தற்போது ரூ.20,000/- ஆக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கணினி உதவியாளர்கள், மேற்படி அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி தொகுப்பூதியம் வழங்கிட கோரியுள்ளனர் தற்போது, அனைத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் 63 கணினி உதவியாளர்களும் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் 375 கணினி உதவியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் மாத தொகுப்பூதியமாக வெளிசந்தை நிறுவனம் மூலம் சேவை வரி உட்பட ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை பெற்று வருகின்றனர்.
எனவே, பார்வையில் குறிப்பிட்டுள்ள அரசாணையின் படி அனைத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் அனைவருக்கும் ஒரே விதமாக ரூ.20,000/- (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) உயர்த்தி வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்படி, தொகுப்பூதியமாக வெளிசந்தை நிறுவனம் மூலம் சேவை வரி உட்பட ரூ.20,000/-கும் மிகாமல் வழங்கப்பட வேண்டும்.
மேற்படி அறிவுரைகள் 01.07.2025 முதல் செயல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு இன்று ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா இஆப வெளியிட்டுள்ள ஆணையில் தெரிவித்துள்ளார்.