என்ன செய்தி ஒற்றரே…
ஊராட்சி செயலாளர்களின் போராட்ட பிரச்சனை,அதனால் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறிப்பாக, மாவட்டம் விட்டு மாவட்ட இடமாறுதல்,பணியிடைநீக்கம் என புண்பட்ட ஊராட்சி செயலாளர்களை வேல்விட்டு ரணப்படுத்தும் வேலையை அதே துறையில் உள்ள பிற சங்கங்கள் செய்து வருகின்றனவாம் தலைவா..
என்ன சொல்கிறீர் ஒற்றரே…
ஆமாம் தலைவா…அதிகாரிகள் அங்கம் வகிக்கும் ஒரு சங்கம் எரிகிற வீட்டில் புடுங்கிறவரை லாபம் என்ற வகையில் ஊராட்சி செயலாளர்கள் சங்க உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் செய்து வருகிறதாம்.
துக்க வீட்டில் நெற்றி காசை எடுக்கும் நெறிகெட்ட செயல் அல்லவா ஒற்றரே..
சரியான வார்த்தை சொன்னீங்க தலைவா…அதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருவதாக தென்மண்டலத்தை சேர்ந்த மாநில நிர்வாகி ஒருவர் நம்மிடம் சொன்னர்.
இதற்கு முடிவுதான் என்ன ஒற்றரே…
அதே தென்மண்டல நிர்வாகி நம்மிடம் தொடர்ந்து பேசும்போது, கருணையோடு ஆணையர் அய்யா எங்களின் இடர்களை விரைவில் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.அதுவரை, பிற சங்கங்களிடம் இருந்து எங்கள் உறுப்பினர்களை தக்க வைக்கும் வேலையை செய்து வருகிறோம் என்றார் என செய்தி சொல்லிவிட்டு மறைந்தார் ஒற்றர்.




























