உண்மையான உழைப்புக்கு விருது? – ஒற்றர் ஓலை

நேற்றைய செய்திக்கு தொடர்ச்சியா ஒற்றரே…

ஆமாம் தலைவா…சுதந்திர தின விருதுகள் பற்றி நேற்று நாம் பேசியதற்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்தன.தங்களின் ஆதங்கங்களை கொட்டி தீர்த்தனர்.

பெரிய தவறு தானே ஒற்றரே…

களத்தில் பணி செய்பவர்களை விட, உட்கார்ந்த இடத்தில் இருந்து கோப்புகளை பார்க்கும் மேலாளர் நிலை அதிகாரிகளுக்கு விருது வழங்கிய விந்தையும் நடந்துள்ளது தலைவா…

அவர்களுக்கு கொடுப்பது தவறா ஒற்றரே…

தவறு இல்லை தலைவா…ஆனா, களத்தில் பணியாற்றும் தூய்மை காவலர் தொடங்கி ஊராட்சி செயலாளர் தொடர்ந்து களத்தில் பணிபுரிபவர்களுக்கு சில மாவட்டங்களில் விருதே வழங்கவில்லை.

இது மிகப்பெரிய தவறு ஒற்றரே…

ஆமாம் தலைவா…உண்மையாக உழைப்பவர்களை பாராட்ட தவறியது பெரும் தவறு. நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக உண்மையாக உழைப்பவர்களை கண்டறிந்து ஆண்டுதோறும் கெளரவிக்க உள்ளதாக தெரிகிறது. முழு விவரங்களை விரைவில் கூறுகிறேன் என சொல்லிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  நொணையவாடி ஊராட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம்