அனைவருக்கும் அனுபவப் பாடம்-கற்றுக் கொடுக்கும் கொரொனா

உறவுக்கான நாட்கள்

பணம்..பணம்  என பறந்து கொண்டிருந்த மனிதர்கள் மனைவி,குழந்தைகள் என வீட்டிற்குள் நேரத்தை செலவிட வைத்து விட்டது கொரொனா.

மகளோ,மகனோ என்ன படிக்கிறார்கள் என இப்போது கேட்கும் தந்தை…

வீட்டில் உள்ளவர்களின் பிறந்த நாட்களை சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம்…

சமையல் அறைக்குள் நுழைந்து சமையல் செய்வதன் கஷ்டத்தை கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டிய அவசியம்…

தொலைக்காட்சியில் சிறுவர்கள் சேனலை தானும் பார்க்கவேண்டிய சூழல்…

தனிமைப்பட்டுள்ள நிலையில் யார் யார் நம்மை நலம் விசாரிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பு…

இப்படி….அனைவருக்கும் பல்வேறு அனுபவங்களை தந்து கொண்டிருக்கிறது கொரொனா.

 

Also Read  இராஜபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக நிவாரண உதவி