என்ன ஒற்றரே…தேடுதல் வேட்டை ஆரம்பம் ஆகிவிட்டதா.
ஆமாம் தலைவா…ஒற்றர் ஓலைக்கு செய்தி கொடுத்தது யார். ஒற்றர் யார் எந்த ஊர் என சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் பரபரப்பு பற்றி கொண்டுள்ளதாம்.
எனக்கும் தகவல் வந்தது…சம்மந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதட்டம் அதிகரித்துவிட்டதாம். டிஎன் பாஸ் விவரம் வெளியே கசிந்தது எப்படி என மூளையை கசக்கி வருகிறார்களாம். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பட்டியலை எங்கு எப்போது கொடுக்க வேண்டுமோ, அங்கு அப்போது கொடுத்திடுவோம் ஒற்றரே…
மிகச் சரியா சொன்னீர்கள் தலைவா…நம்மை தேடி வரும் நண்பர்களை சென்னைக்கு வரச்சொல்லலாமா.
தேடட்டும் ஒற்றரே…சரியான நேரத்தில் சென்னை முகவரியை நாமே வெளியிடுவோம்.நாம் ஒன்றும் தலை மறைவு பேர்வழி அல்ல. பத்திரிகையாளர்கள். எந்த தனிநபரிடம் மிரட்டல் பத்திரிகை பாணியை கடைப்பிடிப்பவர்கள் அல்ல. யார் தப்பு செய்தாலும் எழுதுவோம். நல்லது செய்தால் பாராட்டுவோம்.
கவர் பெறும் ஊடகத்தினர் போல நம்மை டீல் செய்ய நினைத்துவிட்டார்கள் போல…யார் எங்கு வந்தாலும் சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என்பதை இந்த செய்தியை படிக்கும் நண்பர்கள் உணர்ந்து கொள்வார்கள் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.