தூய்மை காவலர்கள் – வாரத்தில் ஒருநாள் சுழற்சி முறையில் விடுமுறை

ஆணையார்

ஊரக வளர்ச்சி துறை ஆணையார் பா.பொன்னையா இஆப அவர்கள் இன்று பிறப்பித்துள்ள ஆணை வருமாறு.

பொருள்:-

மனு தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் – மாநில மையம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோருதல் – தொடர்பாக.

பார்வை:-

தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம், (TNGOTS), மாநில மையம் கோரிக்கை, நாள் : 09.08.2025.

ஊராட்சிகளில் வீடு தோறும் குப்பைகளை சேகரம் செய்வதற்காக வெளிநிரவல் முறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் (VPRC) அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (PLF) மூலமாக தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பார்வையில் கண்ட கடிதத்தில் தூய்மை காவலர்களுக்கு விடுமுறை மற்றும் விடுப்பு குறித்து கோரிக்கை வரப்பெற்றுள்ளது. இது தொடர்பாக, கீழ்கண்டவாறு தெளிவுரை வழங்கப்படுகிறது.

தூய்மை காவலர்கள் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு துய்க்கலாம். இதற்கு மேல் கூடுதலாக விடுப்பு துய்க்கப்படின் அவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.160 பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இடையங்குளம் ஊராட்சி- இராமநாதபுரம் மாவட்டம்