ஆகஸ்ட்-23
தமிழ்நாடு ஊரகவளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் 23.08.2025 சனிக்கிழமையன்று திருச்சி வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பிரமாண்டமான மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் 16 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.மாநில தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவருமான திண்டுக்கல் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் நடைபெற உள்ள இம்மாநில மாநாட்டு நடைபெறும் இடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பூமி பூஜை நடைபெற்றது.
இதில் மாநில துணை செயலாளர் மாநில மையம் பழனிச்சாமி,திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் அழகுமலை@ போஸ்,மாவட்ட பொருளாளர் தங்கவேல் மற்றும் முத்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இம்மாநாட்டில் ஐம்பதாயிரம் சேர்கள் போடப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்
மாநாடு வெற்றிபெற நமது இணையதளம் சார்பாக வாழ்த்துகள்