சிவகங்கை – கடைநிலை ஊழியர்கள் கொடியேற்றினர்

சுதந்திர தினம்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஒன்றியத்தில் காஞ்சிரங்கால் ஊராட்சியில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை அந்த ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர் ஏற்றி வைத்தார்.

அதுபோல, சோழபுரம் ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர் தேசிய கொடியை ஏற்றி சிறப்பு செய்தார்.

சோழபுரம் ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்தார். இவரே காஞ்சிரங்கால் ஊராட்சிக்கும் பொறுப்பு ஊராட்சி செயலாளராக உள்ளார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்

மேலே குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகள் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத்தின் ஆணையர் அருள்பிரகாஷ். இவரின் பணியை பாராட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

Also Read  குவாகம் ஊராட்சி - அரியலூர் மாவட்டம்