அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் – TNRDOA சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவை…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மையத்தின் Letter Pad -ஐ தவறாக பயன்டுத்தி, தவறான புகார் கடிதத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு முகவரியிட்டு WhatsAPP -ல் பதிவு செய்துள்ளனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் அவர்களைப் பற்றி அவதூறான செய்திகளை WhatsAPP -ல் பரப்பி உள்ளனர். இதற்கும் எங்களது சங்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

நிர்வாகத்திற்கும், சங்கத்திற்கும் உள்ள இணக்கமான உறவினை சீர்குலைக்கும் நோக்கத்தோடு எங்களது சங்கத்தின் letter Pad-ஐதவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்புகார் கடிதத்திற்கும், எங்கள் சங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதையும் கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று பணிமேற்பார்வையாளர்களின் அளவீடு உச்சவரம்பு ரூபாய் 5.00 இலட்சமாக உயர்த்தியும், வேலை நிறுத்தப் போராட்ட நாட்களை தகுதி வாய்ந்த விடுப்பாக வரன்முறைப்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வுக் கூட்டங்களை முறைப்படுத்துவது, காலங்கடந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்தல், பிற துறை பணிகளில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்கப்பட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிரப்பப்படாமல் இருந்த உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட சுற்றறிக்கை வழங்கியது,

Also Read  எங்கே போகிறது ஊராட்சியின் பணம்?

கருணை அடிப்படையிலான பணி நியமனங்களில் குரூப் “சி” தொகுதியில் நிலுவையாக உள்ள விண்ணப்பங்களில் குரூப் “டி” தொகுதியில் மாற விருப்பம் உள்ளவர்களையும் சேர்த்து பணி நியமனம் செய்வதற்கான சுற்றறிக்கை, கருணை அடிப்படையிலான பணி வரன்முறையினை மாவட்ட ஆட்சியர்களே மேற்கொள்வதற்கான சுற்றறிக்கை, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் குற்றவியல் நடவடிக்கை தொடர இசைவாணை வழங்குவது தொடர்பாக சுற்றறிக்கை, ஊராட்சி ஒன்றிய/அரசு தலைப்பிலான ஈப்பு ஓட்டுநர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்பிட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது

பணி ஓய்வு பெற உள்ளவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அவர்களது குடும்பத்தை பாதுகாக்கின்ற வகையில் மனித நேயத்தோடு அணுகி கோப்புகள் மீது உத்தரவு பிறப்பிப்பது உள்ளிட்ட ஊழியர்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனுக்குடன் நிறைவேற்றும் மதிப்பிற்குரிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் அவர்கள் மீது அவதூறு பரப்பியுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் தமிழ்நாடு அரசுக்கும், ஆட்சிக்கும் அவப்பெயரை வகையில் பொய்யான ஏற்படுத்தும் பரப்பியுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

எங்களது சங்கத்தின் Letter Pad-ஐ தவறாக பயன்படுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் அவர்கள் மீது அவதூறு பரப்பிய நபர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Also Read  பருவதனஅள்ளி ஊராட்சி- தருமபுரி மாவட்டம்

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.