என்ன ஒற்றரே…மகிழ்ச்சியாக வந்திருக்கிறீர்கள்.
ஒரே பெயரில் ஊராட்சிகள்,வங்கி கணக்கில் குளறுபடிகள் என நாம் பேசிய செய்தியால் ஊரக வளர்ச்சித் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாம் தலைவா…
அப்படியா ஒற்றரே…
ஆமாம் தலைவா…சிவகங்கை மாவட்ட இளையான்குடி ஒன்றிய பெரும்பச்சேரி ஊராட்சியில் இணைய வழியே செலுத்தும் பணம் அதே மாவட்டத்தில் மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள பெரும்பச்சேரி ஊராட்சிக்கு போய் சேர்ந்து வந்தது.
அதை பற்றி தானே பேசினோம் ஒற்றரே…
தலைவா…இந்த செய்தியை ஊரக வளர்ச்சி துறையின் தலைமைக்கு கொண்டு சேர்த்தோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது என தகவல். ஊரக வளர்ச்சி துறை ஆணையர்,கூடுதல் இயக்குநர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் நமது செய்தி இணைய தளத்தின் சார்பாக நன்றிகள்.
சரியாக சொன்னீர்கள் ஒற்றரே…
பெரும்பச்சேரி ஊராட்சி பிரச்சனை போல பல மாவட்டங்களில் உள்ளதாக தகவல். அனைத்து மாவட்ட அதிகாரிகளும் இது பற்றி ஆய்வு செய்து தலைமை அலுவலகம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.