காணாமல் போகும் உள்ளாட்சி பொருட்கள் – ஒற்றர் ஓலை

தலைவா..அதி முக்கிய செய்தி ஒன்று இருக்கிறது.

சொல்லுங்க ஒற்றரே…

ஜனவரி 5ம் தேதி உள்ளாட்சி பதவிக் காலம் முடிவுற்றதால், சோகத்தோடு மக்கள் பிரதிநிதிகள் பதவியை விட்டு சென்றுள்ளனர்.

ஆமாம் ஒற்றரே…பல இடங்களில் ஆயிரணக்கான பிரதிநிதிகள் கண்ணீர் விட்டு கதறிய காட்சிகளை உள்ளாட்சி அலுவலர்கள் அவர்களுக்குள் நக்கலாக பகிர்ந்து வருகின்றனர்.

அதாவது பரவாயில்லை தலைவா…பதவி விட்டு போகும் போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கணிணி,டேபிள்,சேர்கள் என பல பொருட்களை சில பிரதிநிதிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வருகிறது.அதிகாரத்தை பெறும் தனி அலுவலர்கள் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சரியாய் சொன்னீர் ஒற்றரே…அது மக்கள் சொத்து. அதை பாதுகாக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு.

என்ன நடந்தது என அறிந்து அடுத்த சந்திப்பில் கூறுகிறேன் தலைவா…

Also Read  நகரமயம் ஆகுதலும் - ஊராட்சிகளின் நிலைமையும்