வரி செலுத்துதல்
முதலில் https://vptax.tnrd.tn.gov.in/ இந்த இணையத்தில் உள் நுழையவும்.
இதில் விரைவாக வரி செலுத்த என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அடுத்து pay tax என்பதை கிளிக் செய்யவும்

இதில் உங்களை பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்யவும். அதன் பிறகு, கைபேசி எண்,இமெயில், மாவட்டம்,ஒன்றியம்,ஊராட்சி போன்றவற்றை பதிவிடும். வரி விதிப்பு எண் பதிவிடுவது கட்டாயம். அதன்பிறகு, அந்த பக்கத்தில் உள்ள எழுத்துகளை உள்ளிட்டு Search என்பதை அழுத்தவும்.

அதன்பிறகு, உங்களின் வரி விதிப்பு பற்றிய விவரம் இருக்கும்.
அதன்பிறகு , online ஆப்சனை தேர்ந்தெடுத்த பிறகு pay ஆப்சனை அழுத்தவும்.

பணம் செலுத்துவதற்கு பலவகை ஆப்சன் இருக்கும். உங்களுக்கு தேவையான ஆப்சனை தேர்தெடுத்து பணம் செலுத்தலாம்.
இருக்கு ஆனா இல்ல
பணம் செலுத்துவதற்கான ஆப்சனுக்கு உள் நுழைந்தால்,அடுத்த கட்ட நிலை வருவதில்லை. இணைய தளம் இன்னும் முழுமை பெறவில்லை என்கின்றனர் அதிகாரிகள். விரைவில் அனைத்தும் சரியாகும் என்றனர்.
இதை படிக்கும் ஊராட்சி செயலாளர்கள், உங்கள் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் அனுப்பவும்.
முந்தைய செய்தி































