ஊரக வளர்ச்சித்துறை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 198 வாகனங்களை திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள். உதவி செயற்பொறியாளர்கள். உதவி இயக்குநர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பார்வையில் காணும் அரசு கடிதத்தின்படி, மேற்படி வாகனங்களை மாவட்ட அளவில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுக்கு வழங்கிடும் பொருட்டு 11.07.2025 அன்று காலை 10.45 மணிக்கு தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், கொடியசைத்து துவங்கப்பட உள்ளது என்ற விவரம் வரப்பெற்றுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நேரில் சாவி பெறும் அலுவலர்கள் பெயர்கள்:-
செங்கல்பட்டு– திரு.எஸ்.தனிகாச்சலம், செயற்பொறியாளர்(ஊ.வ)
மதுரை – திரு.அழகேசன், உதவி செயற்பொறியாளர் (ஊ.வ), மதுரை கிழக்கு உபகோட்டம்
திண்டுக்கல்– திரு.வி.ஜெயசந்திரன் மாவட்ட ஊராட்சி செயலர். திண்டுக்கல்
தஞ்சாவூர் – திரு.எம்.டி.விஜய், வ.வ.அ(கி.ஊ), ஒரத்தநாடு.
விருதுநகர் -திரு.எஸ்.சிவக்குமார். வ.வ.அ(கி.ஊ), சாத்தூர்