உயிர்காக்க
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி செயலாளர் ஒருவரின் மகள் சென்னையில் படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி ஏற்பட்ட விபத்தால், உயிருக்கு போராடி வருகிறார். இரண்டு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் விரைவில் மூன்றாவதாக ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது உள்ளது.
இந்த விடயங்களை ஊராட்சி செயலாளர்களின் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் சங்கம் சார்ந்த வாட்ஸ்அப் குழுக்களில் உதவி செய்க என குறுஞ்செய்தி அனுப்புகிறார். அதில், ஆறு கூகுள்பே எண்கள் கொடுக்கப்பட்டது. நாமும் அந்த உதவி செய்யும் பணியில் கலந்து கொண்டோம்.
சரியாக அதே நாள் இரவில் அதே குழுவில் ஒரு செய்தி வந்தது. பதிவிட்ட ஆறு எண்களிலும் தினசரி பரிவர்த்தனை தொகையை கடந்து விட்டது. ஆகவே, மற்றொரு எண்ணை பதிவிட கூறி செய்தி வந்தது.
ஊராட்சி செயலாளர்களின் உயர்ந்த உள்ளம் மனிதம் இன்றும் உள்ளது என்று நமக்கு உணர்த்தியது.
ஊராட்சி செயலாளர்களின் உயர்த்த உள்ளங்களுக்கு நமது இணைய தளத்தின் சார்பாக ராயல்சல்யூட்..