ஆணையர்
2025 ஜூலை 31ம் தேதியிட்டு வெளிவந்துள்ள ஆணையர் ஆணையில், மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் பொது நிதியில் உபரியாக உள்ள நிதியில் இருந்து நிரந்தரம் மற்றும் அடிப்படை பணிகளை செய்யலாம்.
கிராம ஊராட்சி உபரி பொது நிதியிலிருந்து எடுக்கப்பட வேண்டிய பணிகள்.
அனுமதிக்கப்பட வேண்டிய பணிகள் விவரம்
அட்டவணை (2) 60 குறிப்பிட்டுள்ள கணக்கீட்டின்படி பொது நிதியின் உபரித்தொகையில் இருந்து மட்டுமே பணிகள் தேர்வு செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் தீர்மானத்தில் உபரித்தொகை குறித்து சான்றிதழ் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களால் அளிக்க வேண்டும். அதை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), சான்றொப்பம் அளிக்க வேண்டும்.
அ. கிராம ஊராட்சியின் உபரி நிதியிலிருந்து 50% தெருக்கள் மற்றும் சந்துகளில் தார்சாலைகள்/சிமெண்ட் சாலைகள், பேவர்பிளாக் சாலைகள், உள்ளிட்ட சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். புதிதாக அமைத்தல் மற்றும் மேம்பாட்டு பணிகள் எடுத்துக் கொள்ளப்படலாம்.
ஆ. கிராம ஊராட்சியின் உபரி நிதியிலிருந்து 50% குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, சுகாதாரம் மற்றும் கட்டிட பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு செலவினங்கள் மேற்கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள்:
கீழ்காணும் பணிகள், சம்மந்தப்பட்ட ஒன்றியமேற்பார்வையாளரால் அளவீட்டுடன் மேற்கொள்ள வேண்டும்:
குடிநீர் விநியோகம் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு சார்ந்த பணிகள் :
1. மின் மோட்டார் பராமரிப்பு ஒரு ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்ட தொகை மிகாமல்
ii. குடிநீர் விநியோக குழாய் பழுது நீக்கம் மேற்கொள்ளுதல்-
அத்தியாவசிய இடங்களில் உள்ள கைபம்பு / சின்டெக்ஸ் தொட்டி பராமரிப்பு
iv. மேல் நிலை நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பு கட்டாய தேவை இருப்பின் மட்டும்.
V. பழுதான தெரு விளக்குகளை சரிசெய்து மீண்டும் பொருத்துதல்
சுகாதார பணிகள்:
i. நோய் தொற்று பரவாத வண்ணம் மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்தல்
ii. ஊராட்சியில் அதிக அளவில் குப்பை தேங்கும் இடங்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல்
iii. ஊராட்சியில் உள்ள பொது சுகாதார கழிப்பறைகளை பராமரித்தல்
ஊராட்சி கட்டிடங்கள் / இதர சொத்துக்கள் பராமரிப்பு:
i. கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களில் தேவைப்படும் அத்தியாவசிய கட்டுமான பராமரிப்பு பணிகள்
ii. சுடுகாடு/இடுகாடு ஆகியவற்றில் தேவைக்கேற்ப பராமரிப்பு பணிகள்.
மூலதன பணிகள்:
i. சாலைப் பணிகள்:
i. குக்கிராமங்களில் உள்ள தெருக்களில் பேவர் சாலை அமைத்தல் மற்றும் தேவை இருப்பின் புதிய சிமெண்ட் சாலைகள் அமைத்தல்.
குடிநீர் பணிகள்
i. புதிய குடிநீர் ஆதாரங்கள் உருவாக்குதல் கிராம ஊராட்சியில் ஏற்கனவே உள்ள குடிநீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லையெனில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல்.
ii. கிராம ஊராட்சியில் ஏற்கனவே உள்ள குடிநீர் விநியோக பைப்லைன் பழுது நீக்கம் செய்ய இயலாத நிலையில் புதிய பைப்லைன் அமைத்தல்.
iii. குடிநீர் விநியோக விரிவாக்க பணிகள் புதிய குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்க விரிவாக்க பணிகள் மேற்கொள்ளுதல்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.