என்ன செய்தி ஒற்றரே…
ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி விரைவில் முடிவடைய உள்ளது. 1 காலியிடத்திற்கு 5 பேர்களுக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட உள்ளது தலைவா..
பிறகு என்ன ஒற்றரே…
இதுவரை எல்லாம் சரியாகவே நடந்துள்ளது. மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட உள்ள 5 பேரில் யார் அதிகம் பணம் தருவார்கள் என ஆசையை திறந்து வைத்து வலை வீச பாத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.
அதை தடுப்பதற்கு என்ன வழி…
நேர்காணலுக்கு அழைக்கப்பட உள்ளவர்களின் முழு விவரங்களையும் வெளிப்படையாக இணையத்தில் பதிவேற்ற வேண்டும். அதேவேளை,நேர்மையுடன் நேர்காணலை நடத்திட வேண்டும் என விண்ணப்பம் போட்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்
அதுதானே சரியான வழிமுறையாக இருக்கும் ஒற்றரே..
ஆமாம் தலைவா..அடுத்தடுத்த நடைமுறைகளை கண்கொத்திபாம்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தவறாக முடிவெடுத்தால் பாதிக்கப்படுப்போவது அதிகாரிகள் மட்டுமே. அரசியல்வாதிகள் தப்பித்து விடுவர்.
சரியாக சொன்னீர் ஒற்றரே..மத்திய அரசின் பார்வை உள்ளாட்சி நிர்வாகம் நோக்கி திரும்பி உள்ளதாக மூத்த பத்திரியாளர் என்னிடம் கூறினார்.
எனக்கும் தகவல் கிடைத்தது தலைவா…நேர்மையான முறையில் ஊராட்சி செயலாளர் தேர்வு இருக்கும் என நம்பலாம் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.
































