என்ன ஒற்றரே….என்ன விசயம்.
நாம் தொடர்நந்து பேசி வந்த பிடிஓ பாஸ்கரனை தேவகோட்டையில் இருந்து இடமாறுதல் செய்தார்கள். இப்போது,மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனை பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார் தலைவா…
என்ன காரணம் ஒற்றரே…
தேவகோட்டையில் பணியாற்றிய போது செய்த பல்வேறு தவறுகள் கண்டறியப்பட்டன. அலுவலக பயன்பாட்டிற்கு உள்ள கணிணியை எடுத்து சென்றது போன்ற தவறுகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் விசாரிக்க வேண்டும் ஒற்றரே…
ஆமாம் தலைவா…அதே மாவட்டத்தில் இன்னும் சில பேர்கள் பெண்கள் விசயத்தில் செய்யும் தவறுகள் விரைவில் வெட்டவெளிச்சத்திற்கு வரும். அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வேறு ஏதாவது முக்கிய தகவல் உண்டா ஒற்றரே…
பொறியியல் பிரிவில் உள்ள முக்கிய பெண் அதிகாரியின் அட்டகாசம் நாளும் அதிகரித்து வருகிறதாம். மாவட்டத்தில் நான் வச்சதுதான் சட்டம்.அதிமுக்கிய அதிகாரியும் நான் சொல்வதை தான் கேட்பார் என்கிறராம் தலைவா…
அது உண்மையா ஒற்றரே…
ஒப்பந்ததாரர்கள் அனைவரும் அதே கருத்தைத்தான் சொல்கிறார்கள். பெண் அதிகாரிகள் இணைந்து செய்யும் தவறுகளை மாநில தலைமை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகங்களுக்கு பேட்டியாக கொடுத்துள்ளனர் தலைவா..
அனைத்திற்கும் விரைவில் முடிவு வரவேண்டும் ஒற்றரே….
மாவட்ட அமைச்சரும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பற்றிய அதிருப்தியை துறை அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டதாக தகவல் வருகிறது என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.