திருச்சி மாநாடு – நான்கு கோடிக்கு மேல் செலவு

கோரிக்கை மாநாடு

ஆகஸ்ட் 23ம் தேதியில் திருச்சியில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் மாநாடு பற்றி முக்கிய செய்திகள் சில…

  • ஒரு மாதத்திற்கும் மேலாக மாநாட்டு பணிகளை மேற்கொண்ட மாநில,மாவட்ட ஒன்றிய,ஊராட்சி என அனைத்து நிலை பணியாளர்களின் மனித உழைப்பு.
  • மாவட்ட வாரியாக வாகனம் மற்றும் மாநாட்டிற்கு வந்தவர்களின் சாப்பாடு மற்றும் அத்தியாவசிய செலவுகள் பற்றிய சிறு அலசல். உதாரணத்திற்கு சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக 16 வேன்கள்,3 பேரூந்துகள் மற்றும் 10 கார்கள் என வாகன செலவு சுமார் 5 லட்சம். வந்த 900 பேர்களின் சாப்பாடு உட்பட செலவு ஒரு நபருக்கு 500 வீதம் 5 லட்சம்.
  • சிவகங்கை மாவட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக வாகனம் மற்றும் வந்தவர்களின் எண்ணிக்கை.
  • சராசரியாக ஒரு மாவட்டத்தில் இருந்து மாநாட்டு வருவதற்கான செலவு 8 லட்ச ரூபாய்.
  • மாநாட்டு மேடை மற்றும் மாநாட்டின் அனைத்து செலவுகளும் சுமார் 30ல் இருந்து 40 லட்சம் வரை ஆனதாக தெரிகிறது.
  • ஆக, மாநாட்டிற்கு அனைத்து மாவட்டத்தில் இருந்து வந்தவர்களின் செலவு சுமார் 3.50 கோடி.
  • மாநாட்டு செலவையும் சேர்த்து 4 கோடிக்கு மேலாகவே ஆகியிருக்கும்.

ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், கணிணி உதவியாளர் , மேல்நிலை தண்ணீர் தொட்டி இயக்குபவர்கள், மக்கள் நல பணியாளர்கள் என ஊராட்சிகளில் பணி புரியும் அனைத்து நிலை பணியாளர்களும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க திருச்சியில் கூடினர்.

Also Read  மே 3- உலக பத்திரிகை சுதந்திர தினம்

இவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும்.

2026 ஆம்  ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் இவர்களின் பங்களிப்பு வெற்றி பெற துடிப்பவர்களுக்கு மிக அவசியம்.இவர்கள் வாக்களிப்பவர்கள் மட்டுமல்ல, பிற வாக்காளர்ளின் மனநிலையை மாற்றும் சக்தி படைத்தவர்கள்.

அனைத்து வாக்களர்களையும் அன்றாடம் சந்திப்பவர்கள். அவர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருப்பவர்கள். கட்சி சாராத வாக்காளர்களை மடைமாற்றும் வித்தை தெரிந்தவர்கள்

ஆக…இவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என எமது ஊடகமும் எதிர்பார்க்கிறது.