இடமாறுதல்
மூன்றாண்டுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை அதே ஒன்றியத்திற்குள் கலந்தாய்வுடன் இடமாறுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று, ஊரக வளர்ச்சி துறையின் ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள் கலந்தாய்வுடன் கூடிய இடமாறுதல் பற்றிய அரசாணையை வெளியிட்டார்.
நிர்வாகிகள்
விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே ஆணையரின் ஆணையை முழுமையாக நிறைவேற்றி உள்ளார் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்கள்.
பெரும்பான்மையான மாவட்டங்களில் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினரே அமல்படுத்த எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. குறிப்பாக, மாநில,மாவட்ட,ஒன்றிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் நீண்டகாலமாக ஒரே ஊராட்சியில் பணியாற்றி வருகின்றனர்.
சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் உள்ளச் சான்றோடு இடமாறுதல் ஆணைக்கு தங்களை உட்படுத்துதல் வேண்டும் என்பதே நம்மோடு பேசிய ஊராட்சி செயலாளர்களின் எண்ணமாக உள்ளது.
போராடி பெற்றதை நடைமுறைக்கு கொண்டு வருவதில் சங்க நிர்வாகிகளே மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு அந்தந்த சங்கங்களின் மாநில தலைமை வற்புறுத்த வேண்டும்.