முனிவரும் தேளும் – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…புராண தலைப்போடு வந்துள்ளீர்.

ஆமாம் தலைவா…தீப மாவட்டத்தில் திட்ட இயக்குநரில் ஒருவர், ஆணையரை பற்றி அவதூறு பரப்பிய அந்த தேள் போல விசம் கொண்ட நபரை பற்றி கொதித்து பேசினார்.முனிவரைப்போல எல்லோருக்கும் நல்லதே செய்யும் ஆணையரை கொட்டும் தேள்களும் இருக்கிறதே என்றார்.

நன்றி மறந்த மனிதர்களும் உண்டு தானே ஒற்றரே…

ஆமாம் தலைவா…ஆனால்,இதே ஆணையர் நகராட்சி துறையில் பணியாற்றிய போது, 3ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவும், பல ஆயிரம் பேர்களுக்கு வாரிசு வேலை கிடைக்கவும் வழிவகை செய்ததை பயன்பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

நன்றி உள்ள மனிதர்கள் அவர்கள். சரிதானே ஒற்றரே..

மிகச்சரி…காஞ்சியில் ஆட்சியராக இருந்தபோது,மூன்று அணைகளை கட்டி விவசாயம் செழிக்க செய்துள்ளார்.அறுவடை முடிந்த உடன் உயிர் பயிர்களோடு அவரை சந்தித்து ஆண்டுதோறும் அந்த மாவட்ட விவசாயிகள் நன்றியை தெரிவித்து வருகின்றனர் தலைவா…

பணிபுரியும் இடங்களில் எல்லாம் நன்மை செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளாரா ஒற்றரே…

ஆமாம் தலைவா…மற்ற துறைகளைவிட தனது தாய் துறைக்கு அனைத்து குறைகளையும் தீர்த்துவருகிறார். அவரின் மனதை புண்படுத்துவது போல உள்ளதாம் அந்த அவதூறு கடிதம். ஆனாலும், அந்த முனிவரைப் போல நல்லதை மட்டுமே தொடர்ந்து செய்வார் என்றனர் அவரை நன்கு அறிந்தவர்கள் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  கிராமசபை கூட்டமும்,நூறுநாள் திட்ட போராட்டமும்