எந்த மாவட்டத்தில் ஒற்றரே…
சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதி ஓடும் ஒன்றியத்தில் நடந்ததுள்ளது தலைவா…
நூறுநாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா ஒற்றரே…
ஆமாம் தலைவா்…ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகத்திற்கும் புகார் அனுப்பி உள்ளார்களாம். ஆட்டுக் கொட்டகையில் ஆட்டைய போட்ட விசயங்களின் விவரங்களை சேகரித்து வருகிறேன். மொத்த ஆதாரங்களை சேர்த்த பிறகு விரிவாக சொல்கிறேன்.
தப்பு செய்தவர் தப்பிக்க கூடாது ஒற்றரே..
நிச்சயமாக தலைவா…ஆதாரங்களை சேகரிக்கும் பணியை ஆரம்பித்து விட்டேன். தனக்கு நெருக்கமானவர்கள் பெயரில் பணத்தை எடுத்துள்ளார்களாம்.தவறு செய்தது சாமியே ஆனாலும் தண்டிக்கப் பட வேண்டும் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.