ஆணையருடன் சந்திப்பு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அவருடன் மாதில நிர்வாகிகள் செல்லப்பாண்டியன்,பத்மநாபன்,சதாசிவம், குணசீலன்,ராஜேஸ்வரி,முருகானந்தம், சுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
சந்திப்பு முடிந்த பிறகு நம்மிடம் உரையாடிய மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது…
ஊரக வளர்ச்சித் துறையில் முதன் முதலில் துவங்கப்பட்ட சங்கம் எங்களுடையது. 1970 ம் ஆண்டு துவங்கப்பட்ட சங்கம். அன்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளோம்.

இன்று ஆணையருடன் நடந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. இந்த துறைக்கு ஆணையர் செய்துள்ள அளப்பரிய சாதனைகளை பட்டியலிட்டு சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்தோம்.
பல்வேறு கோரிக்கைகளை ஆணையரிடம் கொடுத்தோம். குறிப்பாக, ஊராட்சி செயலாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தாயுள்ளத்தோடு ரத்து செய்யவேண்டும். ஊராட்சி செயலாளர்களின் ஓய்வூதியத்திற்கான அரசாணையை ஆணையர் அய்யா பெற்றுக்கொடுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையானதாக வைத்தோம்.
அது தொடர்பான பல்வேறு படிநிலைகளை எங்களிடம் எடுத்து கூறினார். விரைவில் அரசாணை வருவதற்கான அனைத்து காரியங்களும் விரைவாக நடைபெற்று வருவதாக கூறினார்.
விடைபெறும் போது, ஊராட்சி செயலாளர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என மீண்டும் வழியுறுத்தி வந்தோம் என்றார்.




























