ஊரக வளர்ச்சித்துறை
சிவகங்கை மாவட்டத்தில் தாய் சங்கத்தில் இருந்து பிரிந்து சென்ற உறவுகள் எல்லாம் மீண்டும் சங்கத்தில் இணைந்து வருகின்றனர் என்றார் நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் பத்மநாபன் அவர்கள்.
1970ல் தொடங்கப்பட்ட சங்கம். ஊரக வளர்ச்சித்துறையில் முதலில் தொடங்கப்பட்ட சங்கம் என்றால் அது மிகையாகாது. இந்த துறையில் தொடங்கப்பட்ட சங்கங்களை பற்றிய வரலாற்று தகவல்கள் மிக விரைவில் நமது இணைய செய்தி தளத்தில் விரிவாக வெளிவரும்.
இணைந்தார்
கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் முனீஸ்வரன் அவர்கள் தன்னுடைய தாய் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இதுபோன்று பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருவதாக நம்மிடம் அந்த சங்கத்தின் நிர்வாகிகள் கூறினர்.
1970ல் பதிவு பெற்ற சங்கத்தின் செயல்பாடுகள் சிறக்க நமது செய்தி இணைய தளத்தின் சார்பாவும் வாழ்த்துகிறோம்.