ஊராட்களில் வரியை குறைக்க வேண்டுமா? – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே கேள்வியோடு வந்துள்ளீர்…

ஆமாம் தலைவா…எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளுக்கு அறிவிக்கப்பட்ட வரி விகிதம் அதிகம் என அறிவித்துள்ளார்.

நானும் படித்தேன் ஒற்றரே…இது எதிர்கட்சி அரசியல்வாதிகளின் பணி தானே.

உண்மைதான் தலைவா…திராவிட கட்சிகளின் ஆட்சியால் குடிசை இல்லா தமிழ்நாடு உருவாகிவிட்டது என்றல்லவா தம்பட்டம் அடிக்கிறார்கள்.பிறகு எதற்கு வரி உயர்வு என அறிக்கை.

என்ன தான் சொல்கிறீர் ஒற்றரே…

உண்மையிலேயே இப்போது  பெரும்பாலான கிராமங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே குடிசை வீடுகள் உள்ளன என்பது தான் எதார்த்தம். வீட்டு வரியை குறைப்பதை விட, ஊராட்சிகளுக்கான அடிப்படை வசதிகளை கமிசன் இல்லாமல் அனைவரும் செய்ய வேண்டுமென எந்த கட்சியாவது அறிக்கை விட முடியுமா தலைவா…

ஒற்றரே….நமக்கு அரசியல் தேவை இல்லை. செய்திகளை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.

அதுவும் சரிதான் தலைவா… இப்போது அறிவித்துள்ள வரி விகிதம் என்பது சரியே என்கின்றனர் ஊரக வளர்ச்சி ஊழியர்கள்.ஆனால், ஓட்டு அரசியலுக்காக வரி விகிதம் குறையவும் வாய்ப்பு உள்ளது என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  தனி ஆவர்த்தனம் செய்யும் அமைச்சரின் உதவியாளர்- ஒற்றர் ஓலை