போராட்டம்,இடமாறுதல்,ஊராட்சி செயலாளர்கள் நிலை – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…கண்ணீர் கதையா.

ஆமாம் தலைவா…ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தின் விளைவாக பணியிடைநீக்கம், மாவட்ட மாறுதல்,ஒன்றிய மாறுதல் என நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர்.அதில் பெண்கள்,மாற்றுதிறனாளிகள்,இதயநோயாளிகள் என பத்துக்கும் மேற்பட்டோர் நிலை கண்ணீரை வரவழைத்து உள்ளது.

அதற்கு தீர்வு வருமா ஒற்றரே…

தேர்தல் நடைமுறை முடிவுக்கு வந்தபிறகு தான் தீர்வு கிடைக்கும் என தெரிகிறது தலைவா…குறிப்பாக, பெண் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் மாற்றுதிறனாளியான ஊராட்சி செயலாளர்கள் புதிய ஊராட்சியில் பணிபுரிய குடும்பத்துடன் செல்லவேண்டியது உள்ளது.அதனால்,குழந்தைகளின் கல்வி கேள்வி குறியாகி உள்ளது தலைவா..

கடினமான சூழ்நிலை தான் ஒற்றரே…

ஆமாம் தலைவா…அதுமட்டுமல்ல, தங்குவதற்கு இடம் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது.சாப்பாடு பிரச்சனை மிகவும் கடுமையாக உள்ளது. இதனால்,மனரீதியாக குடும்பமே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறதாம் தலைவா..

பாவம் தான் ஒற்றரே..விரைவில் விடிவு கிடைக்கட்டும்.

ஆமாம் தலைவா…விரைவில் பழைய நிலை திரும்பட்டும்.ஒன்றிய மாறுதலுக்கு உள்ளானவர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரே மாவட்டத்தில் எதிர்திசை ஒன்றியத்திற்கு மாறுதல்.குறைந்தபட்சம் 60 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூர இடைவெளி உள்ளது தலைவா. தேர்தல் நடைமுறை முடிந்த பிறகு நிலைமை சீராகும் என நம்பிக்கை வெளிப்படுத்தி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  நூறுநாள் திட்ட ஊழலுக்கு யார் பொறுப்பு?