மீண்டும் போராட்டம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு

போராட்ட அறிவிப்பு

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது கூறியுள்ளதாவது..

தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்கள் 2018 ஆம் ஆண்டு முதல் முறையான கால முறை ஊதியம் ரூ 15900-50400 என C கிரேடு பணியாளர்கள் பெறும் ஊதியம் பெற்று வந்தாலும் ஊராட்சி செயலர்கள் பணி ஓய்வு பெறும் பொழுது ரூபாய் 2000 மட்டுமே மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது..இந்த ஓய்வூதியம் என்பது சிறப்பு காலமுறை ஊதியக்கட்டில் பணியாற்றி வரும் பகுதி நேர பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ஆகும்.

ஊராட்சி செயலாளர்களை பொருத்தமட்டில் நிலையான கால முறை ஊதியத்தில் பணியாற்றும் ஒரு முழு நேர பணியாளர் ஆவார்.. இந்நிலையில் ஊராட்சி செயலாளர்கள் தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்திட வேண்டுமென்று சொல்லி கடந்த ஆறாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 8,000 த்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மாநில அளவில் தொடர் விடுப்பு எடுத்து 8 நாட்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வந்தனர்..அரசும் ரூ 06 கோடிவரை ஊதியப்பிடித்தம் செய்தது..

இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஆணையர் ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி மிக விரைவாக உரிய அரசாணை வெளியிடப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது..

Also Read  சென்னை நோக்கி ஊராட்சி செயலாளர்கள்

ஆனால் போராட்டம் ஒத்திவைத்து பத்து நாட்கள் கடந்த பிறகும் இன்னமும் அரசாணை வெளியிடவில்லை..இது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஊராட்சி செயலாளர்கள் வெகுவாக பாதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது

எனவே ஒத்திவைத்த போராட்டத்தை மீண்டும் பிப்ரவரி 09 ம்தேதி முதல் மாநில அளவில் தொடங்குவது என்றும் இந்த மாநில அளவிலான வேலைநிறுத்த போராட்டம் சென்னையில் 8000 பேர் பங்கேற்போடு தொடர்ச்சியாக அரசாணை வரும் வரை இடைவிடாமல் நடக்கும் என்றும் தமிழ்நாடு அரசு ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்திட வேண்டும் மற்றும் ஏற்கனவே ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்களுக்கு மாதம் ரூபாய் 15,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கையும் அரசாணை வடிவில் பெரும் வரை தொடர் போராட்டம் நடக்கும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்