ஓய்வூதிய கோப்பும்,ஊராட்சி செயலாளர்கள் போராட்டமும் – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…மறுபடியும் சைதாபேட்டை அதகளப்படுதே.

ஆமாம் தலைவா…8 நாள் போராட்ட இடைநிறுத்தம் முடிந்து, மீண்டும் ஊராட்சி செயலாளர்கள் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க தொடர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்க செய்தி கிடைத்ததா ஒற்றரே…

ஆமாம் தலைவா…ஒவ்வொரு ஒன்றியத்தில் ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 700 பேர்களுக்கு மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அப்படியானால் போராட்டம் மட்டுப்படுத்து விட்டதா ஒற்றரே..

அதிகாரத்திற்கு அடிபணியாது போராட்டத்தின் வீரியம் மேலும் வேகம் எடுத்திள்ளது தலைவா…ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஊராட்சி செயலாளர்களின் குடும்பத்தினர் விரைவில் போராட்டம் நடத்த உள்ளனர்.

அப்படியெனில், போராட்ட தீ பரவுகிறதா ஒற்றரே…

ஆமாம் தலைவா…தமிழகம் முழுவதும் குடும்பத்தினர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். தேர்தல் நெருக்கத்தில் ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் ஆளும் கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களின் அன்றாட தேவைகள் பிரச்சனைகளாக மாறி ஆளும் கட்சியின் மீது வெறுப்பாக உருமாற வாய்ப்பு உள்ளது..

இதற்கு நல்ல தீர்வு கிடைத்தால் ஆளுங்கட்சிக்கு நல்லது…

சரியாக சொன்னீர் தலைவரே…ஓய்வூதிய கோப்பை தலைமை செயலகத்தில் விரைவாக சுற்றுக்கு கொண்டு வந்து ஊராட்சி செயலாளர்களின் போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது ஆளும் கட்சிக்கு நல்லது என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  காக்கும் கரங்களுக்கு நமது இணைய தளம் சார்பாக இந்த(பிப்ரவரி -2026) மாத பங்களிப்பு