என்ன ஒற்றரே…புதிய செய்தியா
ஆமாம் தலைவா…நகரம்,மாநகரம்,பேரூராட்சிகளோடு ஒட்டிய ஊராட்சிகளை இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதலில் வெளிவந்த அரசாணைப்படி பல ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.
அதுதான் நடந்துவிட்டதே தலைவா..
அடுத்ததாக வெளிவந்த அறிவிப்பின்படி இணைக்க வேண்டிய ஊராட்சிகளை இணைக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல் தலைவா…
அப்படியா ஒற்றரே…
ஆமாம் தலைவா…பல ஊராட்சிகளில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.தேர்தல் நெருங்குவதை கணக்கில் கொண்டு ஊராட்சிகளின் இணைப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டார்களாம். இன்னும் ஓராண்டிற்கு நூறுநாள் வேலை திட்டத்தை அமல்படுத்த சொல்லிவிட்டார்களாம்.
தேர்தல் படுத்தும் பாடு தானே ஒற்றரே…
சரியாக சொன்னீர்கள் தலைவா…தேர்தலின் வெற்றிக்காகத் தான் இந்த அறிவிப்பு. உள்ளாட்சிகளில் ஆளும்கட்சியினரின் அராஜக தலையீட்டை கட்டுப்படுத்தினால் மட்டுமே தேர்தல் வெற்றி ஊராட்சி பகுதிகளில் சாத்தியப்படும் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.