முடங்கப்போகும் ஊராட்சிகள்-தீவிர போராட்டத்துக்கு தயாராகும் கூட்டமைப்பு-செவி சாய்க்குமா அரசு?

29-10-2025

கிராம மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கடைநிலை பணியாளர்களான தூய்மை காவலர்கள்,தூய்மை பணியாளர்கள்,குடிநீர் ஆபரேட்டர்கள்,மக்கள் நல பணியாளர்கள்,சுகாதார ஊக்குநர்கள்,ஊராட்சி கணினி உதவியாளர்கள்,வேலை உறுதிதிட்ட கணினி உதவியாளர்கள்,சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள்,ஊராட்சி செயலர்கள் இணைந்து தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 01 லட்சம் பணியாளர்கள் கலந்துகொண்ட மாநில மாநாடு கடந்த 23.08.2025 திருச்சியில் நடைபெற்றது அனைவரும் அறிந்த ஒன்று..

திருச்சி - மாநில மாநாடு
திருச்சி – மாநில மாநாடு

அம்மாநாட்டில் மூன்றுகட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக கடந்த 24.09.2025 மாநிலந்தழுவிய மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தற்போது இரண்டாம்கட்டமாக எதிர்வரும் 29.10.2025 அன்று ஒருநாள் தற்செயல்விடுப்பும்,மறியல் போராட்டமும் நடத்தப்போவதாக அக்கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் கூறுகையில் ஊரகவளர்ச்சித்துறையில் கடைநிலையில் பணியாற்றும் பணியாளர்களின் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கோரி தொடர் போராட்டங்கள் செய்து வருகிறோம்.போராட்டங்களின்போது அரசு அழைத்துப்பேசுகிறது.ஆனால் அரசாணைகள் பிறப்பிக்கவில்லை.இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள தருவாயிலும் எங்களது கோரிக்கை நிறைவேற்றாமல் இருப்பது ஏமாற்றத்தை தருகிறது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்னமும் நிதி நெருக்கடி என சொல்லாமல் உழைக்கும் வர்க்கத்தினரின் கோரிக்கைகளை கேட்டு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.அதுவரை தொடர்ந்து போராடுவோம் என்றார்

Also Read  அன்னதானப்பட்டி ஊராட்சி -சேலம் மாவட்டம்

நமக்கு தெரிந்தவரை இந்த விடுப்பு அளித்து மறியல் செய்யும் போராட்டத்தில் ஒருலட்சம் பேர்வரை பங்கேற்பது உறுதியாக தெரிகிறது.இவர்களின் கோரிக்கை நிறைவேறுகிறதா அல்லது புஸ்வானமாகிறதா என போராட்டத்தின் வீரியம் மட்டுமே பதில் சொல்லும்

நமது இணையத்தின் சார்பாக போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்