என்ன செய்தி ஒற்றரே…
ஊராட்சி செயலாளர்கள் தொடர் போராட்டத்தை தற்காலியமாக ஒத்திவைத்து விட்டு பணிக்கு திரும்ப அவர்களின் சங்கம் முடிவெடுத்தது.
நல்ல விசயம் தானே ஒற்றரே..
சரியான நேரத்தில் சங்கம் எடுத்த மிகச்சரியான முடிவு தான். ஆனா..மீண்டும் பணிக்கு சென்றால் பல மாவட்டங்களில் பணிக்கு சேர அனுமதி இல்லை என அதிகாரிகள் சொல்லி வருகிறார்களாம்.
எல்லா மாவட்டத்திலும் இதே நிலை தானா ஒற்றரே..
இல்லை தலைவா…சில மாவட்டங்களில் ஊராட்சி செயலாளர்கள் பணியில் சேர்ந்து விட்டனர். மாவட்டத்திற்கு மாவட்டம் ஏன் இந்த வேறுபாடு என தெரியவில்லை.அதுமட்டுமல்ல, சில மாவட்டங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் என பணிமாறுதல் வழங்கி உள்ளதாக தகவல்.
அராஜகத்தின் உச்சமாக அல்லவா உள்ளது ஒற்றரே…
உண்மை தலைவா…ஆனாலும் ஊராட்சி செயலாளர்கள் மனம் தளராது உள்ளது ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு எல்லாம் விரைவில் சுமூக தீர்வு கிடைக்குமென சங்க நிர்வாகிகள் நம்பிக்கை உடன் கூறுகின்றனர் என சொல்லி மறைந்தார் ஒற்றர்.





























