என்ன ஒற்றரே…எச்சரிக்கை செய்தியா?
ஆமாம் தலைவா…ஊராட்சி செயலாளர்கள் தேர்வில் ஆளும்கட்சியினர் புகுந்து விளையாட புறப்பட்டுவிட்டதாக செய்தி வருகிறது. யாரும் ஏமாறக்கூடாது.
சரியான செய்தி ஒற்றரே..விரிவாக சொல்லும்.
தலைவா…பத்தாம் வகுப்பு மதிப்பெண் 85 சதவீதம், நேர்முக தேர்வு மதிப்பெண் 15 சதவீதம் என அரசு அறிவித்துள்ளது பாரட்டத்தக்கது. பத்தாம் வகுப்பில் 425 மதிப்பெண்ணிற்கு மேலாக எடுத்தவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. யாரும் பணம் கொடுத்து ஏமாறக்கூடாது.
ஏமாறுபவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்கள் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள் ஒற்றரே…ஆதலால், ஊராட்சி செயலாளர் தேர்வை மிக நேர்த்தியாக அறிவித்து உள்ளது பாராட்டுக்குரியது. பத்தாம் வகுப்பில் 85 சதவீத்த்திற்கும் மேலாக எடுத்த ஒழுவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், சம்மந்தப்பட்டவர் நீதிமன்ற செல்வதற்கு வாய்ப்பு அதிகம்.
சரியாக சொன்னீர்கள் தலைவா..தவறு நடந்தால் தண்டனை அதிகாரிகளுக்கு மட்டுமே கிடக்கும். அரசியல்வாதிகள் தப்பித்துவிடுவர்.அதனால், ஊராட்சி செயலாளர் தேர்வில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதிகபட்ச நேர்மையுடன் செயல்பட்டே ஆகவேண்டும் தலைவா…
மாவட்ட காலியிடமாக அறிவிக்கப்பட்டதும் சிறப்பான அம்சமாகும். யாரும் பணம் கொடுத்து ஏமாறக்கூடாது என்ற செய்தியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் ஒற்றரே…
ஆமாம் தலைவா…பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வேலை கிடைப்பது உறுதி என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.