கேரளா மாநிலத்தில் ஊராட்சி நிர்வாகம்

கேரள பஞ்சாயத்து ராஜ்ஜியங்கள் இயங்குவது எப்படி?

நேரு உருவாக்கிய முதல் தலைமுறை பஞ்சாயத்துகளும், 70-களில் ஜோதிபாசு, ராமகிருஷ்ண ஹெக்டே, என்.டி.ராமாராவ் உள்ளிட்டோர் உருவாக்கிய இரண்டாம் தலைமுறை பஞ்சாயத்துகளும் நாடெங்கும் அழிந்தபோதும் கேரளத்தில் மட்டும் அவை நிலைத்தன, நீடித்தன. பிறகு ராஜீவ் காந்தி மூன்றாம் தலைமுறை பஞ்சாயத்துகளை உருவாக்குகிறார். பின்னாளில் நரசிம்மராவ் 73, 74-வது அரசியல் சாசன சட்டத் திருத்தங்கள் மூலம் அதற்கு உயிர் கொடுத்தபோது கேரளத்தில் முதல்வராக இருந்தவர் ஏ.கே.அந்தோணி. உடனே அரசியல் சாசன சட்டப் பாதுகாப்புகளுடன் பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை மேலும் வலுப்படுத்தினார் அந்தோணி. 1994, மார்ச் மாதம் கேரள பஞ்சாயத்து ராஜ்ஜியம் சட்டம் இயற்றப்பட்டது. 1995, அக்டோபரில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

1996 தொடங்கி கேரள மாநில அரசுகள் 35-40 சதவிகிதம் நிதியை நேரடியாச பஞ்சாயத்து ராஜ்ஜியங்களுக்கு ஒதுக்கின. குறிப்பாக கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அடுத்து முதல்வரான ஈ.கே.நாயனார் மக்கள் பங்கேற்பு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். பின்னணியில் அரசியல் முடிவுகளை எடுக்கும் ஸ்தானத்தில் நம்பூதிரி பாட் இருந்தார். அவருடைய ஆலோசனைகள் பஞ்சாயத்துகளை மேலும் வலிமையாக்கின. கேரளம் 100 சதவிகிதம் எழுத்தறிவு பெற்றது இப்படிதான். இதுவே கேரளத்தில் பஞ்சாயத்து ராஜ்ஜியங்கள் உருவான சுருக்கமான வரலாறு.

சரி, கேரளத்தின் பஞ்சாயத்து ராஜ்ஜியங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

முதல்வர் VS பஞ்சாயத்துத் தலைவர்

கேரளத்தில் மாநில அரசுக்கும் பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. மாநிலத்துக்கு முதல்வர் எப்படியோ பஞ்சாயத்துக்கு அதன் தலைவர். சட்டம், ஒழுங்கு. பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளைத் தவிர்த்து இருவரும் கிட்டத்தட்ட சம அதிகாரங்களைக் கொண்டவர்களே. மாநிலத்துக்கு 60 சதவிகிதம் நிதி. பஞ்சாயத்துக்கு 40 சதவிகிதம். மக்கள் வாழ்வாதாரத் திட்டங்களை மாநில அளவில் முதல்வர் உருவாக்குவார். பஞ்சாயத்து அளவில் தலைவர் உருவாக்குகிறார். அரசு வருவாய் திட்டங்களை மாநில அளவில் முதல்வர் உருவாக்குவார். பஞ்சாயத்து அளவில் அதன் தலைவர் உருவாக்குகிறார். உற்பத்தி மற்றும் சேவை கட்டமைப்புகளை மாநில அளவில் முதல்வர் உருவாக்குவார். பஞ்சாயத்து அளவில் தலைவர் உருவாக்குகிறார்.

Also Read  ஊராட்சி செயலர் ஒருவரின் கடிதம்
சட்டசபை VS கிராம சபை

சட்டசபையைப்போல கிராம சபை செயல்படுகிறது. ஆனால், சட்டம் இயற்றும் அதிகாரம் கிடையாது. சட்ட சபையில் மக்கள் பங்கேற்க முடியாது. ஆனால், கிராம சபையில் மக்கள் பங்கேற்கலாம். மக்கள் ஆதரவுடன் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. முதல்வருக்கு கீழே அமைச்சர்களைப் போல பஞ்சாயத்தில் அதன் உறுப்பினர்கள் செயல்படுகிறார்கள். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உறுப்பினர்களின் தலைமை அல்லது பங்களிப்புடன் நிதிக் குழு, வளர்ச்சிக் குழு, கல்வி மற்றும் சுகாதாரக் குழு, மக்கள் நலக் குழு ஆகிய நான்குக் குழுக்கள் செயல்படுகின்றன. கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மேற்கண்ட குழுக்களின் விகசன கூட்டங்களில் இறுதி வடிவம் பெறுகின்றன.

தலைமைச் செயலாளர் VS பஞ்சாயத்து செயலாளர்

மாநில அரசுக்கு தலைமைச் செயலாளர் பதவி எப்படியோ அப்படிதான் ஒரு செயலாளரின் கட்டுப்பாட்டில் ஊ பஞ்சாய்த்தில் செயல் அமர்பஞ்சாயத்து குழுக்களில் இறுதி வடிவம் கொப்பஞ்சத்துக்கு அதன் செயலாளர் புதளி அரசுபணியாளரான இவர்தான் செயலாளரிடம் வரும். பஞ்சாயத்து ஊரசு வளர்ச்சி, விவசாயம், கல்வி, மருத்துவம், காற்றடை, பொறியியல்,ந்தைகள் மற்றும் மகளிர் நலம் ஆகிய துறைகள் வருகின்றன மேற்கண்ட துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் பஞ்சாயத்து செயலாளருக்கு நிர்வாக சிதியாக கட்டுப்பட்டவர்கள். இவர்களின் செயல்பாடுகள், நிறை, குறைகள் உள்ளிட்டவற்றை கண்காணித்து பரிந்துரைக்கும் பொறுப்பு பஞ்சாயத்து அதிகாரம் செயலாளருக்குக் கிடையாது. இவர் பரிந்துரையின் அடிப்படையில் பஞ்சாயத்து தலைவர் மூலம் பஞ்சாயத்துக் குழுக்கள் நடவடிக்கை எடுக்கும். குறிப்பிட்ட சில மேல்நடவடிக்கைகளை கல்வித்துறை, சுகாதாரத் துறை போன்ற மாநில அரசு துறைகள் மட்டுமே எடுக்க இயலும்.

நிதிப் பகிர்வில் ‘சுலேகா!

மத்திய அரசு, மாநில அரசு ஆகியவை பஞ்சாயத்துக்கு ஒதுக்கும் சுமார் 40 சதவிகித நிதியை கையாள்பவரும் செயலாளர்தான். சேவை, உற்பத்தி, உள்கட்டமைப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் நிதி பிரிக்கப்படுகிறது. மேற்கண்ட நிதியில் 60 சதவீதம் கல்வி, சுகாதாரம், விவசாயம், பெண்கள், குழந்தைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் நலம், இளைஞர் மேம்பாடு ஆகியவற்றுக்கு கட்டாயமாக ஒதுக்கப்பட வேண்டும். மீதமுள்ள 40 சதவீத நிதியை உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புக்கு பயன்படுத்த வேண்டும். மேற்கண்ட நிதி பகிர்வுகளைத் தலைவரோ உறுப்பினர்களோ செயலாளரோ தன்னிச்சையாக செய்ய முடியாது. கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறை உருவாக்கிய பிரத்தியேக மென்பொருளான ‘சுலேகா’ தான் நிதியைப் பகிர்வு செய்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் இரண்டு லட்சம் பஞ்சாயத்து திட்டங்களைக் கண்காணிப்பதும் ‘சுலேகா’ மென்பொருள்தான். தவிர, மாநில திட்டக்குழு நிதி பகிர்வையும் ‘சுலேகா’ மேற்கொள்கிறது. மேற்கண்ட திட்டங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் – மார்ச் மாதத்தில் நிதி அறிக்கையை பஞ்சாயத்து செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் ஜூலை மாதத்தில் திட்டங்கள் செயல்பட தொடங்கும்.

Also Read  ஊராட்சிகள் இணைப்பு - ஊழியர்கள் நிலை என்ன?
பஞ்சாயத்து வேட்பாளர்கள் தேர்வு

தமிழகத்தை போல் அல்லாமல் கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களைக் கட்சிகளே தேர்வு செய்கின்றன. சுயேட்சைகள் போட்டியிடலாம். ஆனால், ஆதிக்கம் செலுத்துவது கட்சிகளே. பெரும்பாலும் இடதுசாரி முன்னணி அல்லது ஐக்கிய ஜனநாயக முன்னணி. கட்சிகளின் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடலாம். கிராம அளவில் நடக்கும் சிறிய தவறுகள் கூட மாநில அளவில் கட்சிகளின் பெயரை பாதிக்கும் என்பதால் வேட்பாளர்கள் தேர்வில் கவனமாக இருக்கின்றன கட்சித் தலைமைகள். அதேசமயம், தேர்தலுக்கு பிறகு தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறு செய்தால் வடிக்கை எடுக்கவும் கட்சி தயங்குவதில்லை .

கேரள பஞ்சாயத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு கவுரவ சம்பளம் உண்டு. புஞ்சாயத்துத் தலைவருக்கு சம்பளம் ரூ.13.500. துணைத் தலைவருக்கு சம்பளம் 500 குழுத் தலைவர்களுக்கு சம்பளம் ரூ. 8,500. வார்டு உறுப்பினர்களுக்கு சம்பளம் ரூ.7,000. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பான கேரளா உள்ளாட்சி நிர்வாகக் கழகம் (Kerala Institute of Local Adminstration) பஞ்சாயத்துகளை வழிநடத்துகிறது. மேற்கண்டதில் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை.

 டி.எல். சஞ்சீவிகுமார் அவர்களுக்கு நன்றி