செய்நன்றி
மதிப்பிற்குரிய ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!* ஐயா நான் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து 25 கடும் குறைபாடு தணிக்கை பத்திகள் நிலுவையில் இருந்தும் / 8.65 இலட்சம்BDO பெயரில் வழங்கப்பட்ட முன்பணம் நிலுவையில் இருந்தும் 32 ஆண்டுகள் எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றியும் 30.05.2025 அன்று மதிப்புமிகு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் பணி ஓய்வு பெற(Retired to permit) அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
ஆனால் நமது ஊரக வளர்ச்சித் துறையில் பழைய நடைமுறைகளை நினைவுபடுத்த விரும்புகிறேன்! முன்னொரு காலத்தில் ஒரே ஒரு கடுங்குறைபாடு தணிக்கை பத்தி நிலுவையில் இருந்தால் கூட பணி ஓய்வு பெற அனுமதிக்கப்படாத காலகட்டத்தில் இருந்து இன்று நான் தப்பித்துள்ளேன்!
இன்று எனக்கு DCRG Amount ₹ 20.32akhs Commutation ₹ 13.37 இது மட்டுமின்றி normal pension எனக்கு கிடைக்கப்போகிறது. எனது pension முன்மொழிவு online. Offline வழியாக AGக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பணப்பலன் கிடைத்த பிறகு எனது இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளேன்! முன்பண நிலுவை /கடுங்குறைபாடு தணிக்கைப் பத்திகளை கருத்தில் கொள்ளாமல் பணி ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவினை வழங்கிய என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய மதிப்பிற்குரிய ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அவர்களுக்கு மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் !
நீங்கள் தான் ஐயா எங்களது கடவுள்! என்னைப் போன்ற ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் மறுவாழ்வுக்கு வித்திட்ட தங்களது பாதங்களில் எனது மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்! மிக்க நன்றி ஐயா!
தங்களின் கருணை உள்ளத்துடன் மறுவாழ்வு பெற்றுள்ள. சுவாமிநாதன். BDO Rtd. (Mobile. 7402715739) கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம்