இக்காட்டான சூழ்நிலையிலும் உதவிக்கரம் நீட்டிய காக்கும் கரங்கள்- ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே…பாராட்டு செய்தி எல்லாம் சொல்கிறீர்.

ஆமாம் தலைவா..நல்லது நடந்தால் பாராட்டுவோம்.தவறு என்றால் கண்டிப்பாக சுட்டிக்காட்டுவோம்.அதுதானே ஊடக தர்மம் தலைவா..

கண்டிப்பாக ஒற்றரே..

நாம் ஏற்கனவே ஊராட்சி செயலாளர் போராட்ட விசயம் பற்றி விரிவாக பேசினோம். அந்த ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக காக்கும் கரங்கள் என்ற ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது தலைவா.

எதற்காக அந்த அமைப்பு ஒற்றரே..

ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் மாதந்தோறும் ஐநூறு ரூபாய் நிதி அளித்து வருகிறார்கள். திடீரென மரணமடையும் ஊராட்சி செயலர் குடும்பத்திற்கு 50ஆயிரம் நிதி உதவியும், நோய்வாய்பட்டவர்களின் மருத்துவ செலவிற்கும் உதவி வருகின்றனர்.நமது இணைய தளத்தின் பங்களிப்பாக மாதம் ஐநூறு ரூபாயை கடந்த ஒரு வருட காலமாக செலுத்தி வருகிறோம்.

புண்ணிய காரியம் தானே…மேலும் தொடரட்டும் ஒற்றரே…

சரியாக சொன்னீர்கள் தலைவா…இடமாறுதல் பிரச்சனையில் தவிக்கும் இந்த காலகட்டத்தில் இரண்டு பேர் இயற்கை எய்தியதற்கு ஒரு லட்ச ரூபாயும்,மருத்துவ உதவியாக ஊராட்சி செயலாளர்களுக்கு மூன்று லட்ச ரூபாயும் காக்கும் கரங்கள் மூலம் வழங்கி உள்ளனர் தலைவா…

இதயம் நிறைந்த பாராட்டுக்கள் தலைவா..

மாற்று சங்கத்தை சேர்ந்த முக்கியமான மாநில நிர்ரவாகி ஒருவர் இந்த செயலை மனமுவந்து பாராட்டி என்னிடம் பேசினார் தலைவா. நானும் அந்த காக்கும் கரங்கள் அமைப்பை மனதார பாராட்டுகிறேன் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்

Also Read  ஊராட்சி செயலர்களுக்கு கவுன்சிலிங் முறை பணி மாறுதல் எப்போது?