சுதந்திர தின விருதுகள் – ஒற்றர் ஓலை

என்ன செய்தி ஒற்றரே…

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த முறையில் பணியாற்றிய அலுவலர்களுக்கு அந்தந்த துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி சிறப்பிப்பது நடைமுறை தலைவா…

ஆண்டுதோறும் நடைமுறையில் இருப்பது தானே ஒற்றரே…

ஊரக வளர்ச்சித் துறை சார்பாக அனைத்து நிலை பணியாளர்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை தேர்வு செய்து இந்தாண்டும் விருது வழங்கி சிறப்பித்த நிவழ்வு நடந்தேறியது தலைவா..

மகிழ்ச்சியான செய்தி தானே ஒற்றரே…

மகிழ்ச்சி தான் தலைவா…சில மாவட்டங்களில் தங்களுக்கு வேண்டப்பட்ட அலுவலர்களை தேர்வு செய்து விருது வழங்கிய நிகழ்வும் நடந்துள்ளது. உண்மையாக பணியாற்றிய பலருக்கு அது வருத்தத்தை கொடுத்துள்ளது.

அப்படி நடந்திருந்தால் அது தவறு தான் ஒற்றரே…

அப்படிப்பட்டவர்களை பற்றிய பட்டியலே நம்மிடம் உள்ளது. அவர்களின் விவரங்களை வெளியிடுவதில் விருப்பம் இல்லை. அதேவேளை, இதுபோன்ற தவறு தொடர்ந்து நடைபெறா வண்ணம் உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சொல்லி விட்டு மறைந்நார் ஒற்றர்.

Also Read  ஊராட்சிகளில் லேஅவுட் மற்றும் பிளான் அப்ரூவல் - ஒற்றர் ஓலை