சுய நிர்ணயம்
உள்ளாட்சி நிர்வாகம் குறிப்பிட்ட அளவு தொகை்கான திட்டங்களை மட்டுமே தாங்களே முடிவு செய்ய முடியும். அப்படி முடிவு செய்யும் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்படவும், மேலிட அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்திடவும் கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் வரம்பு ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சம் ஆகவும்; வட்டார ஊராட்சிக்கான அனுமதி வரம்பு ரூ.10 லட்சம் என்பதை ரூ.20 லட்சம் ஆகவும்; மாவட்ட ஊராட்சிகளுக்கான அனுமதி வரம்பு ரூ.20 லட்சம் என்பதை ரூ.50 லட்சம் ஆகவும் உயர்த்தி வழங்கிப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.