மருத்துவ நிதியுதவிரூ 527361
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) அவர்கள் சாலை விபத்தில் தலையில் பலத்த காயமுற்று உயர்சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது அறுவை சிகிச்சைக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக நிதியுதவி கோரப்பட்டதில் பல மாவட்டநிலை அலுவலர்கள்,அலுவலர்பெருமக்கள்,பெரும்பான்மையான ஊராட்சி செயலர்கள் நிதியளித்ததன் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தொகை ரூ 527361(ஐந்துலட்சத்து இருபத்து ஏழாயிரத்து முன்னூற்று அறுபத்து ஒன்று) ஐ இன்று TNPSA மாநில துணைத்தலைவர் திரு.K.கவிச்செல்வன் அவர்கள் தலைமையில் விழுப்புரம் மாவட்ட தலைவர் செஞ்சி நீலமேகன்,மாநில இணைச்செயலாளர் திரு.நேரு உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவ மனையில் பெற்றோரிடம் வழங்கினர்.
நிதியுதவி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்
மாநில தலைவர்
V.வேல்முருகன்
மாநில பொதுச்செயலாளர்
K.மகேஸ்வரன்
மாநில பொருளாளர்
TNPSA-SRG-DINDIGUL-09/20