கூடுதல் பொறுப்பு
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக அரசு துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் மக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் இந்த நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ககன்தீப் சிங் பேடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
* கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
* வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
நீர்வளத் துறை
* சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
* தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
* இயற்கை வளங்கள் துறை