சங்கத்திற்கு நிதி,இடமாறுதல் ரத்து – ஒற்றர் ஓலை

என்ன கொடுமை ஒற்றரே…

ஆமாம் தலைவா…நாம் ஏற்கனவே இடமாறுதல் பற்றி ஒரு சங்கம் அதிருப்தியில் இருப்பதாக பேசி கொண்டோம் அல்லவா.அதே சிவகங்கை மாவட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாறுதலில் இருவருக்கும் மட்டும் இடமாறுதல் ஆணை ரத்து செய்யப்பட்டு உள்ளதாம்.

அதுசரி ஒற்றரே…என்ன நன்கொடை அதை கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்.

ஒரு குறிப்பிட்ட சங்க பயிற்சி கருத்தரங்கத்திற்கு ஊராட்சி செயலாளர்கள் நன்கொடை அளித்துள்ளனர்.அதுவும் டிஎன் பாஸ் மூலம் பணத்தை எடுத்து நன்கொடை கொடுத்துள்ளனராம் தலைவா…

உண்மையா ஒற்றரே…

அனைத்தும் உண்மை…இதுபற்றி வழக்கு போட்டாலும் ஆதாரத்தோடு நிரூபிப்போம். ஊராட்சி செயலாளர்களிடம் கட்டளையிட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பட்டியலே நம்மிடம் உள்ளது.பல ஆண்டுகளாக வேலைக்கே செல்லாமல் சம்பளம் வாங்கும் நிர்வாகியை பற்றி மாவட்டத்தில் உள்ள மற்ற சங்கத்தினர் பொருமி தள்ளுகின்றனர்.

உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையா ஒற்றரே…

துறையின் மாநில தலைமை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உண்டு என்பதே அந்த மாவட்டத்தின் நிலை தலைவா..

இந்த விசயத்தை பேசினால் நமக்கே மிரட்டல் விடுப்பார்களே ஒற்றரே ..

தலைவா…முதல்வரை பற்றியே நாம் பேசுகிறோம். அதற்கே நாம் பயப்படுவதில்லை. குறிப்பிட்ட நபர்களின் மிரட்டலுக்கா அஞ்சுவோம். எந்த நிலையிலும் உண்மையை உரக்க சொல்வோம். எந்த அச்சறுத்தலையும் நெஞ்சுரத்தோடு சந்திப்போம்.

Also Read  மின்னாம்பள்ளி ஊராட்சி - சேலம் மாவட்டம்

சரியாக சொன்னீர் ஒற்றரே…அமைச்சர்களை பற்றியே பேசி உள்ளோம். அவர்களை விடவா அதிகாரம் படைத்தவர்கள் இவர்கள். அதையும் சந்தித்துவிடுவோம்.

ஆமாம்…அனைத்தையும் எதிர்பார்த்து காத்திருப்போம் என கூறிவிட்டு மறைந்தார் ஒற்றர்.