இந்திய ஆட்சி பணியாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 37( சென்னை தவிர்த்து) மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக இந்திய ஆட்சி பணியாளர்கள் 10 மாவட்டங்களில் தற்போதைய நிலையில் பணியாற்றி வருகின்றனர்.
18 மாவட்டங்களில் இஆப அதிகாரிகள் பணியாற்றி வந்த நிலையில், படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 10 மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர்.
10 மாவட்டங்கள்
செங்கல்பட்டு, கோவை, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சேலம், நீலகிரி, தூத்துக்குடி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தற்போதைய நிலையில் இஆப அதிகாரிகள் பணியில் உள்ளனர்.
ஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிக்காக வரும் இஆப அதிகாரிகளை அதிகபட்சமாக ஒரு வருடம் மட்டுமே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பதே ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் உதவி இயக்குநர்களின் கோரிக்கையாக உள்ளது.
பல மாவட்டங்களில் இரண்டு ஆண்டுகளை கடந்தும் கூடுதல் ஆட்சியராக பணியில் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.அப்படி தொடர்ந்து பணியாற்றி வருவதால் தான் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டிய நிலை வருகிறது.
ஆகவே…ஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிக்காக வரும் இந்திய ஆட்சி பணியாளர்களின் பணி காலத்தை ஓராண்டாக நிர்ணகிக்க வேண்டும் என்பதே ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் உதவி இயக்குநர்களின் வேண்டுகோளாக உள்ளது.