இஆப இடமாறுதலும் – ஊரக வளர்ச்சித் துறையினர் புலம்பலும் – ஒற்றர் ஓலை

சுடச்சுட செய்தியா ஒற்றரே…

ஆமாம் தலைவா…ஊரக வளர்ச்சித் துறையில் பயிற்சிக்காக வரும் இஆப எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என பல காலமாக கூக்குரல் போட்டு வருகின்றனர். அதனால்,பதவி உயர்வில் பாதிப்பு வருவதாக புலம்பி தீர்க்கின்றனர்.

இப்போது வந்துள்ள பட்டியலில் கூடுதல் ஆட்சியராக சில மாவட்டங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளதே ஒற்றரே…

இதே போலத் தான் கடந்தமுறை இடமாறுதல் உத்தரவில் சில இடங்கள் காலியாக இருந்தன. அடுத்த சில நாட்களில் அந்த இடங்களும் இஆப அதிகாரிகளை இட்டு நிரப்பி விட்டனர். அதே நிலை மறுபடியும் வந்துவிடுமோ என அச்சப்படுகின்றனர் தலைவா…

அவர்களின் அச்சத்தில் நியாயம் இருக்கிறதே ஒற்றரே….

ஆமாம் தலைவா…அதைவிட திருவாரூர் மாவட்ட திட்ட இயக்குநராக ஒரு இஆப அதிகாரியை இந்த உத்தரவில் புதிதாக போட்டுள்ளனர்.குறைக்க வேண்டும் என குரல் கொடுக்கும் போது, இஆப எண்ணிக்கையை ஊரக வளர்ச்சி துறையில் அதிகப் படுத்துகிறார்களோ என ஐயம் ஏற்படுகிறது என சந்தேகத்தை கிளப்பிவிட்டு மாயமானார் ஒற்றர்.

Also Read  புதிய இடத்தில் பணியில் சேர உத்தரவு - ஒற்றர் ஓலை