ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதல் பற்றிய ஆணையர் உத்தரவு? – ஒற்றர் ஓலை

கவுன்சிலிங் உடன் கூடிய இடமாறுதல் உத்தரவு தானே ஒற்றரே…

ஆமாம் தலைவா…ஆணையரின் உத்தரவை முழுமையாக அமல்படுத்திய ஒரே மாவட்டம் விருதுநகர். அன்றைய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்களின் சீரிய முயற்சியால் நடந்து முடிந்தது.

மூன்றுவகையாக ஊராட்சிகளை பிரித்து இடமாறுதலை சிறப்பாக நடைமுறை படுத்தியதை நானும் அறிவேன் ஒற்றரே…

மாவட்ட ஆட்சியரின் அந்த நடவடிக்கையில் உறுதுணையாக செயல்பட்ட உதவி இயக்குநர் அரவிந்த் அவர்கள் தற்போது சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக வந்துள்ளார் தலைவா…

அப்படியெனில் சிவகங்கையிலும் நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு தானே ஒற்றரே….

அதுபற்றிய தகவலோடு வந்துள்ளேன் தலைவா…ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாத காலகட்டத்தில் மூன்றாண்டுகள் முடிவுற்ற ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்வது. ஆண்டுக்கு இடையில் ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்ய வேண்டுமெனில், மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலோடு மட்டுமே பிடிஓக்கள் செயல்படுத்த வழிவுறுத்தி சுற்றறிக்கை வரும் என செய்தி கிடைத்தது.

சூப்பரான தகவல் ஒற்றரே…

தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட அதிகாரிகள் இதனை போலவே வழிகாட்டும் ஆணை வழங்கி ஊரக வளர்ச்சி ஆணையரின் உத்தரவை முழுமையாக நடைமுறை படுத்தவேண்டும். அப்போது தான் அனைத்து ஊராட்சி செயலாளர்களுக்கும் சரிசமமான வாய்ப்பு கிடைக்கும் தலைவா…

Also Read  தொகுதி வரையறைக்காக பொதுத்தேர்தலை தள்ளிவைக்கலாமா? உள்ளாட்சிக்கு ஒரு சட்டமா?

சரியாக சொன்னீர் ஒற்றரே…

வசதி உள்ள ஊராட்சிகளுக்கு இடமாறுதலுக்கு பல லகரங்கள் பேரமும் தவிர்க்கப்படும்.அதிகார வர்கத்தினரின் தலையீடும் மட்டுப்படும் என கூறி விட்டு மறைந்தார் ஒற்றர்.