ஊராட்சிகளில் தொழில் உரிமம் கட்டாயம் – விண்ணப்பம் மற்றும் உரிம அனுமதி கட்டண விவரம்

ஊரக வளர்ச்சித்துறை

முதன்மை செயலாளர்/ கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங் பேடி இஆப அவர்கள், தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியிட்டுள்ள அரசாணையில் ஊராட்சி பகுதியில் தேநீர் கடை முதல் உற்பத்தி ஆலை வரை அனைத்து சிறு குறு தொழில்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் முழுமையான விதிமுறைகள்,அட்டவணை படுத்தப்பட்டுள்ள தொழில்கள், விண்ணப்ப விவரங்கள், விதிக்கப்பட வேண்டிய வரி விவரங்கள், தொழில் உரிம கட்டணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தனித்தனி செய்தியாக அரசாணையில் உள்ள விவரங்களை வெயிடுவோம். முதலில், வகைப்படுத்தபட்டுள்ள தொழில்களும் அதற்கான விண்ணப்ப கட்டணம் மற்றும் உரிம அனுமதி கட்ட விவரங்களை பார்ப்போம்.

5 லட்ச ரூபாய் வரை  முதலீட்டுடன் செய்யப்படும் தொழில்களுக்கு விண்ணப்ப கட்டணம் 500 ரூபாய். நகர்புறங்களை ஒட்டி உள்ள ஊராட்சிகளில் உரிம அனுமதி கட்டணம் ஆயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் ரூபாய் வரை. ஊராட்சி பகுதிகளில் 250 முதல் 500 ரூபாய் வரை.

இதுபோன்ற முழுபட்டியல் கீழே:-

 

Also Read  கனியாகுளம் ஊராட்சி - கன்னியாகுமரி மாவட்டம்